கல்லூரியில் வைத்து கும்பலாக சரக்கடித்த மாணவிகள் - ஆப்படித்த கல்லூரி முதல்வர்.!

கல்லூரியில் வைத்து கும்பலாக சரக்கடித்த மாணவிகள் - ஆப்படித்த கல்லூரி முதல்வர்.!


kanchipuram-pvt-college-girl-students-drinks-video-10-s

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாத்தூரில் தனியார் கலை & அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இக்கல்லூரியில் முதல் வருடம் பயின்று வரும் 10 க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையில் வைத்து மதுபானம் அருந்தியுள்ளனர். 

மேலும், மதுவை குளிர்பானத்தில் கலந்து குடித்த வீடியோ கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இந்த வீடியோ சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரின் கவனத்திற்கும் சென்ற நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. 

kanchipuram

அப்போது, கல்லூரி மாணவன் உதவியுடன் மதுவை கல்லூரிக்கு வாங்கி வந்த மாணவிகள், அதனை கும்பலாக சேர்ந்து குடித்துள்ளனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவிகளை தக்காளிக இடைநீக்கம் செய்த கல்லூரி முதல்வர், பெற்றோரிடம் கண்டித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்காலிக இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து இனி இது போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் எச்சரித்து அனுப்பியுள்ளார்.