கள்ளத்தன மதுவிற்பனையை தட்டிக்கேட்ட திமுக பிரமுகரை அரிவாளால் கூறுபோட்ட பெண் ரௌடி... துள்ளத்துடிக்க பலியான உயிர்.!Kanchipuram Padapai DMK Supporter Killed by Woman Rowdy

சட்டவிரோத செயலை எதிர்த்த திமுக கவுன்சிலர், மற்றொரு திமுக பெண் பிரமுகரால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை, நடுவீரப்பட்டு எட்டையபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ் (வயது 31). இவர் நடுவீரப்பட்டு 7-வது வார்டு கவுன்சிலர், வார்டு செயலாளர் ஆவார். இதே ஊரில் வசித்து வரும் திமுக பெண் பிரமுகர் லோகேஸ்வரி என்ற எஸ்தர். இவர்கள் இருவருக்கும் இடையே அரசியல் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், லோகேஸ்வரி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

லோகேஸ்வரியின் செயல்பாடுகளை கவனித்து வந்த சதீஷ், அவரை கண்டித்து சட்டவிரோதமான மது விற்பனையை கைவிட கூறி அறிவுறுத்தி வந்துள்ளார். இதனால் இருதரப்பு மோதல் அவ்வப்போது நிகழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று எஸ்தரின் தரப்பை சேர்ந்தவர்கள் சதீஷை எஸ்தரின் வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த சதீஷை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல், உடலை அவரின் வீட்டருகே வீசிவிட்டு தப்பி சென்றது. 

kanchipuram

இந்த விசயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சதீஷை எஸ்தர் மற்றும் அவரின் ஆதரவு ஆட்கள் கொலை செய்து தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், எஸ்தர் கையில் வாளுடன் இருக்கும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.