த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
டிவி பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம்; 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை., கண்ணீரில் பெற்றோர்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை, அண்ணா நகரில் வசித்து வருபவர் சம்பத். இவரின் மனைவி கற்பகம். தம்பதிகள் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களுக்கு 17 வயதுடைய ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சமீபமாக படிப்பில் நாட்டமின்றி தொலைக்காட்சி பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனை கண்டித்த பெற்றோர், நன்கு படித்து நல்ல மதிப்பெண்ணை தேர்வில் பெற வேண்டும் என அறிவுரை கூறி இருக்கின்றனர். இதனால் மனமுடடடந்துபோன ஹேமலதா, பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மீண்டும் வீட்டிற்கு வந்த பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின், இதுகுறித்து காஞ்சிபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.