எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே.!. நினைவிருக்கட்டும் நான் யார் தெரியுமா.? வீடியோவை வெளியிட்ட கமல்.!

எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே.!. நினைவிருக்கட்டும் நான் யார் தெரியுமா.? வீடியோவை வெளியிட்ட கமல்.!


kamalhasan-shared-video-with-mgr

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு, சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த தேர்தலுக்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, டிசம்பர் 13 ஆம் தேதி மதுரையில் தொடங்கினார்.

மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில், "புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். எதுவும் தடையல்ல" என்ற பதிவுடன் எம்.ஜி.ஆரிடம் தான் விருது வாங்கும் பழைய வீடியோவை வெளியிட்டுள்ளார்.