அரசியல் தமிழகம்

இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள்.. கமல்ஹாசன் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்.!

Summary:

இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள்.. கமல்ஹாசன் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்.!

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தநிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களின் 5-வது கட்ட பட்டியலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு அதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகத் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களின் 5-ஆவது கட்ட பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புறங்களுக்கு  நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள். திறமைக்கு வாய்ப்பளியுங்கள்". என குறிப்பிட்டுள்ளார்.
 


Advertisement