இறுதி வரை போராடி தோற்ற கமல்ஹாசன்.! எதுவும் பேசாமல் சோகமாக கிளம்பி சென்ற வீடியோ காட்சி.!kamal hasan video

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான் ஆகிய  5 பேர் களமிறங்கினர். இதில்,  திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும், பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும் கடுமையான போட்டி நிலவியது. ஆரம்பத்தில் இருந்தே கமல்ஹாசன் முன்னிலையில் இருந்துவந்தார். ஆனால் இறுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார்.


இருவருக்கும் குறைந்த அளவிலான வாக்குவித்தியாசமே நிலவிய நிலையில் இறுதியில் வானதி சீனிவாசன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் கமல்ஹாசன் பேனா மற்றும் பேப்பருடன் உட்கார்ந்து இருந்தார். இந்த நிலையில் தோல்வி செய்தியை அறிந்தவுடன் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வாடிய முகத்துடன் வெளியேறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.