என் அன்புத் தம்பி உதயநிதிக்கு.. பாசத்துடன் உலகநாயகன் கமல் வெளியிட்ட பதிவு.! குவியும் வாழ்த்துக்கள்!!

என் அன்புத் தம்பி உதயநிதிக்கு.. பாசத்துடன் உலகநாயகன் கமல் வெளியிட்ட பதிவு.! குவியும் வாழ்த்துக்கள்!!


kamal-birthday-wishes-to-udhayanidhi-stalin

திமுக இளைஞர் அணி செயலாளராகவும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாகவும் திகழ்பவர் உதயநிதி ஸ்டாலின். அவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த கலகத் தலைவன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல பகுதிகளில் ஏராளமான நலத்திட்ட உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,  சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்பு தம்பியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.