பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
டிராக்டர் பின்பக்க கதவு மோதி இளைஞர் பரிதாப பலி.. கண்ணீரில் துடித்த குடும்பத்தினர்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, பிள்ளையார் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் குப்பன். இவரின் மகன் ஜெய்சங்கர். இவரின் மீது அப்பகுதியை சேர்ந்தவரின் ட்ராக்டர் பின் கதவு இடித்துள்ளது.
இதனால் கழுத்து பகுதியில் பலமான காயம் ஏற்படவே, ஜெய்சங்கர் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்த்தியடைந்த குடும்பத்தினர் ஜெய்சங்கரின் உடலை கட்டியணைத்து கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.