கலிகாலம்!! 11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமான விவகாரம்... காதலன் தலைமறைவு.!

கலிகாலம்!! 11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமான விவகாரம்... காதலன் தலைமறைவு.!


kalikalam-11th-class-student-pregnant-affairboyfriend-a

சென்னையில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியுடன்  புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் பழகி வந்துள்ளார். இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளியே சென்று சந்தித்து பேசி உள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனால் அது எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனிமையில் சந்தித்து உள்ளனர். அப்போது விக்னேஷ் ஆசை வார்த்தைக் கூறி பலமுறை அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

Women harrestment

இந்நிலையில் அடிக்கடி மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதையின் முடிவில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விக்னேஷ் மீது புகார் அளித்தனர்.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ்யை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த விக்னேஷ் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.