தமிழகம்

காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு! குவிக்கப்பட்ட போலீசார்!

Summary:

Kaduvetti guru son injured

பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் குருவின் நினைவிடம் அருகே குருவின் மகன் கனல் மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோரை ஒரு கும்பல் மறித்து பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து ஒரு கும்பல் கனலை அரிவாளால் வெட்ட வந்துள்ளனர்.  அப்போது மனோஜ் குறுக்கே வந்ததால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கனலையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். 

 

அங்கு நடந்த சம்பவத்தால் பலத்த காயமடைந்த காடுவெட்டி குருவின் மகன் கனல், மருமகன் மனோஜ் ஆகியோரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.  பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்புக்காக காடுவெட்டி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement