சீமான் பாஜக ஆளு..! சீமானை உடனே கைது செய்ய வேண்டும்.! ஜோதிமணி வெளியிட்ட வீடியோ!

சீமான் பாஜக ஆளு..! சீமானை உடனே கைது செய்ய வேண்டும்.! ஜோதிமணி வெளியிட்ட வீடியோ!


jothimani talk about seeman

கடந்த ஞாயிற்றுக் கிழமை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் அரசியல் தலைவர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று கரூர் தொகுதி எம்பியான ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து  கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி அவரது ட்விட்டர் பக்கத்தில், "சீமான் இந்த மேடையில் இருந்திருக்கிறார். அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்த பயங்கரவாத பேச்சு நடந்திருக்க முடியும். ஆகவே சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதற்குமுன்பு இதே சட்டத்தின்கீழ் இப்படி கைது நடந்திருக்கிறது.


நாம் தமிழரின் இந்த பேச்சு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றம்.தமிழகத்தின் அமைதியும்,அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும்.தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில்  ஒருதுளிகூட சமரசம் செய்துகொள்ளக்கூடாது.தமிழக அரசு கடிமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சீமான் ஒரு பாஜக அடிவருடி. பாஜக இம்மாதியான பயங்கரமான குற்றச்செயல்களில் இருந்து தங்களை காப்பாற்றும் என்கிற தைரியத்தில்தான் இப்படி பேசுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெயரை டேக் செய்துள்ளார்,