அரசுடைமையாக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம்! உள்ளே இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் வெளியீடு!

அரசுடைமையாக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம்! உள்ளே இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் வெளியீடு!



jayalalitha-vedha-house-property-details-announced-by-g

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார். அதனைத் தொடர்ந்து அவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டு நினைவில்லமாக்கபட்டது.

அதனைத் தொடர்ந்து பல சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விவரங்கள் கணக்கிடப்பட்டு, அந்தப் பட்டியலை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

jayalalitha

அதன்படி, ஜெயலலிதாவின்  வேதா  இல்லத்தில் 4 கிலோ 372 கிராம் கொண்ட 14 தங்கப் பொருட்கள், 601 கிலோ 424 கிராம் கொண்ட 
வெள்ளிப் பொருட்கள் 867 இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும்  11 டிவிக்கள், 10 ஃப்ரிட்ஜ்கள், 38 குளிர்சாதன பெட்டி,  556 ஃபர்னிச்சர், 6514 சமையலறைப் பொருட்கள், 15 பூஜை பொருட்கள், 10,438 துணிகள், 29 தொலைபேசிகள், மொபைல் போன்கள், 8376 புத்தகங்கள், 108 அழகு சாதன பொருட்கள்,  653 ஆவணங்கள், 6 கடிகாரங்கள் ஆகியவையும் இருந்ததாக கூறப்படுகிறது.