தமிழகம்

யூடியூப் பார்த்து மதுபானம் தயாரிக்க முயன்ற ஐடி ஊழியர் கைது.!

Summary:

IT person arrse in prepared of drinks

சென்னை நீலாங்கரையை அடுத்த சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் ராகுல். இவர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஏற்ப்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மதுகடைக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மதுப்பிரியரான ராகுல் மதுக்கிடைக்காததால் தனது நண்பருடன் யூடியூபை பார்த்து மது தயாரிக்க முயன்றுள்ளார். அதற்காக இருவரும் சேர்ந்து மது தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்துள்ளனர்.

இச்சம்பவம் போலீசாருக்கு தெரியவரவே ராகுல் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகியோரை கைது செய்து, அவர்கள்  மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர். 


Advertisement