கமல் மீது செருப்பு, கல், முட்டை வீச்சு! பிரச்சாரத்தில் கலவரம்! அதிர்ச்சி வீடியோ!

கமல் மீது செருப்பு, கல், முட்டை வீச்சு! பிரச்சாரத்தில் கலவரம்! அதிர்ச்சி வீடியோ!


issue in kamal election canvas

அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கற்கள் வீசப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கமல்ஹாசன் கட்சி உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நடிகர் கமல்ஹாசன் கோட்சே பற்றி பேசியது பெரிய சர்ச்சையாகி தேசிய அளவில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நான் கூறியது சரித்திர உண்மை என கூறியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் முட்டை, கல், செருப்பு ஆகியவற்றை மர்ம நபர்கள் வீசியுள்ளனர். கல்வீசிய நபா் மீது கட்சி தொண்டா்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினா். இதனைத் தெடா்ந்து கல் வீசிய நபரை காவல் துறையினா் கைது செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் தற்போது போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சூலூர் தொகுதியில் நாளை கமல்ஹாசன் பரப்புரைக்கு செல்லவிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.