திருமணத்திற்கு தயாரான புதுமாப்பிள்ளை தற்கொலை; உறவினர்கள் சோகம்.!



in Thoothukudi Man Dies by Suicide 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம், ஆனந்த மாடன் பச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் மெய்யப்ப போஸ் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

நாளை திருமணம்

இவருக்கும், அக்கா மகள் ஒருவருக்கும், நாளை (03 பிப் 2025) திருமணம் நடைபெற நிச்சயம் செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. நேற்று இரவு பணிக்கு சென்றவர், பின் மீண்டும் அப்பகுதியில் இருக்கும் புதிய கட்டிட வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதையும் படிங்க: வீடு ஜப்தி நடவடிக்கையில் விபரீதம்; லாரி ஓட்டுநர் பூச்சி மருந்து குடித்து, உயிருக்கு போராடி மரணம்.! 

தூக்கிட்டு தற்கொலை

அங்கு இருந்தவரை உணவு சாப்பிட பாட்டி பேச்சியம்மாள் அழைக்கச் சென்றபோது, அவர் தூக்கிட்டு நிலையில் காணப்பட்டுள்ளார். பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், போஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் குறித்து தருவைகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசி விவசாயி பலி.. தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் அலட்சிய உச்சத்தால் பறிபோன உயிர்.!