தஞ்சாவூர்: 7 மாத கைக்குழந்தை தொடையில் பலூன் சிக்கி மரணம்; பெற்றோர்களே கவனம்.!
பலூனை தவறுதலாக விழுங்கிய குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம், ஊரணிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சதிஷ் குமார். இவரின் மனைவி சிவகாமி (வயது 30). தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் ஏழு மாதமாகும் ப்ரகதீசன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: ரூ.250 பந்தயத்திற்கு ஆசைப்பட்டு மாணவர் பரிதாப பலி.. முட்டித்தூக்கிய காளை.. தஞ்சாவூரில் சோகம்.!
நேற்று முன்தினத்தில் விளையாடிய குழந்தை, திடீரென உறங்குவது போல இருந்தார். அவர் நீண்ட நேரம் ஆகியும் அசைவின்றி இருந்ததால், குழந்தையின் தாய், குழந்தைக்கு பால் கொடுக்க முற்பட்டார்.

தொண்டை பலூனில் சிக்கி சோகம்
அப்போது, குழந்தை மூச்சுத்திணறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
பின் உடல் பிரேத பரிசோதனைக்கு காவல் துறையினரால் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தையின் தொண்டை பகுதியில் பலூன் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனால் குழந்தை பலூனை விழுங்கி மரணித்தது உறுதியானது. இந்த விஷயம் குறித்து திருவோணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவரை இழந்த பெண் குழந்தையுடன் விபரீதம்.. பெண் தற்கொலை, மகன் உயிர் ஊசல்.!