மட்டன் ஏன் சமைக்கல? மனைவி கொடூர கொலை.. கணவர் வெறிச்செயல்.!

இரவு உணவாக மட்டன் சமைத்து தராத மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூபாஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் மாலத் கலாவதி (வயது 35). இவருக்கு திருமணம் முடிந்து பாலு என்ற 36 வயதுடைய கணவர் இருக்கிறார்.
பாலு விவசாய கூலியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில், பாலு உணவு சமைக்க மட்டன் வாங்கி வந்துள்ளார். அதனை கலாவதி சமைக்க இயலாது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சீட்டுக்கட்டு விளையாடச் சென்ற இடத்தில் வட்டி கேட்டு தகராறு; ரௌடி கொலை.!
இந்த விஷயம் தம்பதிகள் இடையே வாக்குவாதத்தை உண்டாக்கி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலு, தனது மனைவியை கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அரிது வந்த காவல்துறையினர், கலாவதியின் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான பாலுவை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: #Breaking: பிரபல ரௌடி குறுந்தையன் 2 பேர் கும்பலால் வெட்டிக்கொலை; பழிக்குப்பழியாக பயங்கரம்.. தஞ்சாவூரில் பரபரப்பு.!