புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மின்கம்பி உருவத்தில் வந்த எமன்; 12 வயது சிறுவன் துள்ளத்துடிக்க பலி., சிவகங்கையில் சோகம்.!
பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, பெரும்பச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவரின் மனைவி காவேரி. இவர் சத்துணவு ஊழியராக வேலை பார்க்கிறார். தம்பதிகளுக்கு 12 வயதுடைய கார்த்திக் என்ற மகன் இருக்கிறார். இவர் தம்பதிகளின் ஒரே மகன் என்பதால், மகனை அன்புடன் பெற்றோர் கவனித்து வந்துள்ளனர். சிறுவன் கார்த்திக் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: சிவகங்கை: 13 வயது சிறுமி பலாத்காரம்.. வழக்குக்கு பயந்து கிணற்றில் தள்ளிவிட்டு கொலை..!
மின்கம்பி அறுந்து விழுந்து சோகம்
தீபாவளியை முன்னிட்டு சிறுவன் கார்த்திக், அக்.31 அன்று மாலை நேரத்தில் தனது வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடிக்கு அருகில் பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம், அவரின் தலைக்கு மேல் சென்றுகொண்டு இருந்த உயரமின்னழுத்த கம்பி, கார்த்திக்கின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இபி அலட்சியத்தால் சோகம்
இதனைக்கண்டு அதிர்ந்துபோன சிறுவனின் பெற்றோர் & உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்படவே, தகவல் அறிந்து வந்த இளையான்குடி காவல்துறை அதிகாரிகள் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டிஎன்இபி அதிகாரிகளின் அலட்சியம் சிறுவனின் மரணத்திற்கு முக்கிய காரணம் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் பயங்கரம்.. காரைக்குடி மேயரின் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி ஆடியோ வைரல்.!