புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நண்பர்கள் எதிரிகளானதால் பயங்கரம்; சிறுவர்கள் பிரச்சனை கொலையில் முடிந்தது.. வயிற்றை கிழித்துக் கொன்ற தோழன்.!
பெற்றோர்களின் நட்பு எதிராளிகளானதும் குழந்தைகள் வாயிலாக எமன் பாசக்கயிறு வீசிய சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி, தும்பல்பட்டி, இரட்டைபுலிபுதூர் கிராமத்தில் வசித்து வருபவர் கனகராஜ் (வயது 35). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கனகராஜின் மனைவி சத்திய பிரியா. தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 12, 5 வயதுடைய இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
12 வயதுடைய மகன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இப்பள்ளியில், கம்மாளப்பட்டி, எட்டிக்குட்டை கிராமத்தில் வசித்து வரும் முத்து (வயது 30) என்பவரின் 5 வயதுடைய மகன் என்.கே.ஜி பயின்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: லாரிக்கு மேலே கட்டிவைத்து அழைத்துச் செல்லப்பட்ட நாய்; பதறவைக்கும் வீடியோ.!
இடைநிறுத்தப்பட்ட மாணவர்
கடந்த 15 நாட்களுக்கு முன் பள்ளியில் கனகராஜின் மகனான 12 வயது சிறுவன், முத்துவின் மகனை தவறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த பள்ளியின் நிர்வாகம், மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின் ஏழாம் வகுப்பு மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முத்து, தனது சகோதரர் வினோத் (வயது 27) என்பவரிடமும், உறவினர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், முத்து, வினோத், குணா ஆகியோர் சேர்ந்து ஏழாம் வகுப்பு மாணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
கைகலப்பு கொலையில் முடிந்தது
'
அங்கு உங்களின் மகன் எதற்காக எனது மகனிடம் தகராறு செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். அச்சமயம் கனகராஜின் உறவினர்கள் திரண்டதால், இருதரப்பு வாக்குவாதம் உண்டாகியது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாகவே, முத்துவின் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன வினோத், தன்னிடம் இருந்த கத்தியால் கனகராஜின் வயிற்றில் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் கனகராஜ் மயங்கியதும் சம்பவத்திற்காக வந்த மூவரும் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த கனகராஜ் உயிரிழக்கவே, காவல்துறையினர் வினோத் மற்றும் குணாவை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், கனகராஜ், முத்து ஆகியோர் ஒரே லாரியில் ஓட்டுநர், கீழ்நீராக வேலை பார்த்து வந்த நிலையில், நண்பர்களான இருவரும் தங்களின் பிள்ளைகளை ஒரே பள்ளிக்கு படிக்க அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடந்த தகராறில் கனகராஜ் மகனுக்கு டிசி கொடுக்கப்பட்டுள்ளது. தகராறை மீண்டும் கேட்கச் சென்ற இடத்தில் அடிதடி, கொலை சம்பவம் நடந்தது அம்பலமானது.
இதையும் படிங்க: வினையில் முடிந்த பள்ளி பருவ காதல்... பிளஸ் 2 மாணவி கர்ப்பம்.!! 17 வயது மாணவன் கைது.!!