இராஜபாளையம்: கண்டைனர் லாரி - இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து; இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் மரணம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டவர் கோகுல் (வயது 39). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், வ.உ.சி நகரில் வசித்து வந்துள்ளனர். தற்போது கோகுல் காப்பீடு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
லாரி மோதி விபத்து
இதனிடையே, ஜனவரி 17ம் தேதி இரவு நேரத்தில் வேலைகளை முடித்துக்கொண்ட கோகுல், இருசக்கர வாகனத்தில் சத்திரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை பகுதியில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, எதிர்திசையில் வந்த கண்டைனர் லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோகுல், பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மகளுக்கு உணவு கொடுத்த 10 நிமிடத்தில் தலை நசுங்கி உயிரிழந்த தந்தை; வழக்கறிஞருக்கு லாரியில் வந்த எமன்.!
காவல்துறையினர் விசாரணை
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த இராஜபாளையம் தெற்கு நகர காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து கோகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் செல்வம் (வயது 57) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதையும் படிங்க: திருட்டு நகையில் பைக் வாங்கிய இளைஞன்; குடும்பத்தோடு கம்பி எண்ணும் பரிதாபம்.!