திருட்டு நகையில் பைக் வாங்கிய இளைஞன்; குடும்பத்தோடு கம்பி எண்ணும் பரிதாபம்.!



in Virudhunagar Srivilliputhur Man Arrested Chain Snatching 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் முத்துலட்சுமி (வயது 70). இவரின் மகன் கணேசன். இவர் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். 

கடந்த ஜன.15 மாட்டுப்பொங்கல் அன்று, தனது வீட்டில் இருந்த 11 சவரன் தங்க செயினை அணிய தேடியபோது, அது மாயமாகியுள்ளது. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.

இதையும் படிங்க: 17 வயதில் பப்பி லவ்.. காதல் தகராறில் 18 வயது கல்லூரி மாணவர் குத்திக்கொலை.!

Virudhunagar

திருட்டு நகையில் பைக்

அப்போது, மாயாண்டிபட்டி தெருவில் வசித்து வரும் அழகர்சாமியின் மகன் காளிராஜ் (வயது 19) என்பவர், மூதாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து நகையை கொள்ளையடித்து தெரியவந்தது. 

மேலும், இதனை வைத்து தாய் பத்மாவதி (வயது 34), சித்தி ஆனந்தவல்லி (29) ஆகியோரின் பெயரில் நகையை அடகு வைத்து பைக் வாங்கி இருக்கிறார். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர். 

இதையும் படிங்க: மகளுக்கு உணவு கொடுத்த 10 நிமிடத்தில் தலை நசுங்கி உயிரிழந்த தந்தை; வழக்கறிஞருக்கு லாரியில் வந்த எமன்.!