சித்தப்பா, 85 தாத்தா, 25 வயது இளைஞன் என சிறுமியை திட்டமிட்டு வேட்டையாடிய கொடுமை.. ஊட்டியில் அதிர்ச்சி.!



in Nilgiris Ooty 15 Year Old Girl Sexually Absued 

 

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி, தந்தையை இழந்தவர் ஆவார். இவர் தனது தாய், சகோதரர் பராமரிப்பில் இருக்கிறார். அங்குள்ள பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வுக்காக தயாராகி வந்த மாணவியை, உறவினர்கள் நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற அறிவுறுத்தி, வாழ்த்தி இருக்கின்றனர். 

இதனால் மனமுடைந்துபோன சிறுமி, ஜன.24 அன்று சித்தி வீட்டிற்குச் சென்று தங்கி இருக்கிறார். இதனிடையே, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சிறுமியின் சித்தப்பா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை யாரிடமும் கூறினால் அம்மா, அண்ணனை கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். 

இதையும் படிங்க: 12 வயது சிறுமி பலாத்காரம்.. அமைதி காத்த தாய்.. சிறுமியின் புகாரால் 3ம் கணவருடன் ஓட்டம்.! 

சிறுமி பலாத்காரம்

பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறவில்லை. கடந்த பிப்.14 அன்று சிறுமியை பாட்டி ஊரின் திருவிழாவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை 25 வயதான உறவுக்கான வாலிபரான திருமணமான இளைஞர் சந்தித்து, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தன்னை வெளியே கூறக்கூடாது என மீண்டும் மிரட்டப்பட்டுள்ளது.

Nilgiris

சிறுமியை, பக்கத்து வீட்டில் வசித்த்து வரும் 85 வயது முதியவரும் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல்நிலை மோசமாகவே, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தோழியிடம் விவரித்து இருக்கிறார். இந்நிலையில், தோழி ஆசிரியர் உதவியுடன் குழந்தைகள் நலத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  

தகவலின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா, 25 வயது இளைஞர் ஆகியோரை கைது செய்தனர். 85 வயது முதியவர் உடல்நலக்குறைவால் படுத்தப்படுகையாக இருப்பதால், அவரை கைது செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: விறகு சேகரிக்க சென்றபோது சோகம்; முதியவர் காட்டு யானை தாக்கி மரணம்.!