#Breaking: தேர்வு மைய அறையிலேயே 18 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.. கிருஷ்ணகிரியில் மீண்டும் அதிர்ச்சி.!



in-krishnagiri-bargur-teacher-sexual-harassment


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி, அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

மாணவிக்கு தேர்வு மையமாக அங்குள்ள அன்சூர், ஜெகதேவி அரசுப்பள்ளியில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனிடையே, நேற்று சிறுமி வழக்கம்போல தேர்வு மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு மாணவியின் வகுப்பறையில் தேர்வு மைய அதிகாரியாக ரமேஷ் என்பபவர் பணியாற்றி இருக்கிறார்.

Krishnagiri

பாலியல் தொல்லை

இவர் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மாணவியின் வகுப்பறையில் தேர்வு அதிகாரியாக இருந்தவர், மாணவிக்குக் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: சடலத்துக்கு புதிய வேஷ்ட்டி சட்டை.. கதறிய படியே நடந்த திருமணம்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ரமேஷை கைது செய்தனர். இவர் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.

Krishnagiri

ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தை மையமாக வைத்து பல பாலியல் வழக்குகள் தொடர்பான விஷயங்கள் வெளியாகிய நிலையில், தற்போது மீண்டும் இந்த சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் விதிமுடிந்த தந்தை; உயிரிழந்த அப்பா முன் திருமணம் நடத்திய உறவினர்கள்.! சோகத்திலும் நெகிழ்ச்சி சம்பவம்.!