BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சோசியல் மீடியா பழக்கம் எங்க கொண்டு வந்திருக்கு பார்த்தீங்களா.. தனிமை போட்டோஸ் லீக் செய்த காதலன்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல், இணையம் பகுதியில் வசித்து வருபவர் 30 வயது பெண்மணி. இவருக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்தார்.
தம்பதிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இளம்பெண்ணுக்கு, குளச்சல் பகுதியில் வசித்து வரும் ராபர்ட் (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை ராபர்ட் போட்டோ & வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணமாகாத ஏக்கம்.. குடிக்கு அடிமையான ஓட்டுநர், தூக்கிட்டு தற்கொலை.!
இதனிடையே, சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரச்சனை உண்டாகி பிரிந்துவிட்ட நிலையில், பெண்ணின் ஆபாச படங்களை ராபர்ட் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
இந்த விஷயம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராபர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆண்டவா என்ன கொடுமை இது? மின்சாரம் தாக்கி 4 பேர் மரணம்.. பதறவைக்கும் காட்சிகள்.!