முன்னாள் காதலனுடன் குடித்தனம்.. மனைவியின் கதைமுடித்த கணவன்.. ஈரோட்டில் பயங்கரம்.!

முன்னாள் காதலருடன் குடும்பம் நடத்திய மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சித்தோடு பகுதியில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு, செங்குந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோபால் (வயது 44). இவர் வெல்டிங் தொழிலாளி ஆவார். கோபாலின் மனைவி மணிமேகலை (வயது 38). இவர் சித்தோடு, வசுவைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மிக்ஸர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: முயல் இரத்தம் கலந்த எண்ணெய் பறிமுதல்; 3 கடைகளுக்கு ஈரோட்டில் சீல்.!
இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கோபால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாதமாக மனைவியை பிரிந்து இருந்த கோபால், நேற்று மதியம் மனைவியின் பணியிடத்திற்கு சென்று பேசியுள்ளார்.
மனைவி கொலை
அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தான் மறைத்து வைத்த கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தில் மணிமேகலை நிகழ்விடத்தியிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சித்தோடு காவல்துறையினர், மணிமேகலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலால் பயங்கரம்
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிமேகலை, அவருடன் படித்து வந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து இருக்கிறார். பின் இருவரும் பிரிந்துவிட்டனர். மணிமேகலைக்கு கோபாலுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே, மணிமேகலை - மோகன்ராஜ் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து தம்பதியிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், கோபால் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றதும், மோகன்ராஜுடன் மணிமேகலை ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கோபால் மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: "பெரியாரின் ஆவி சீமானை பார்த்துக்கும்" - திமுக பிரமுகர் தடாலடி பேச்சு.!