முயல் இரத்தம் கலந்த எண்ணெய் பறிமுதல்; 3 கடைகளுக்கு ஈரோட்டில் சீல்.!



Erode Rabbit Blood Hair Oil Shop Seized 

 

 

தலைக்கு தேய்க்கும் எண்ணெயை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் இருக்கும் கடையில், முயல் இரத்தம் கலந்த தலைக்கு தேய்க்கும் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது என மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திற்கு தகவல் தெரியவந்தது.

இதையும் படிங்க: "பெரியாரின் ஆவி சீமானை பார்த்துக்கும்" - திமுக பிரமுகர் தடாலடி பேச்சு.!

இதன்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையைத் தொடர்ந்து 3 கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ரூ.1.2 இலட்சம் மதிப்புள்ள முயலின் இரத்தம் கலந்த எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. 

அதிரடி சோதனை & நடவடிக்கை

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "முயல் இரத்தம் கலந்த எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடந்தது. 

இவர்கள் வைத்துள்ள கடையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்ய உரிமம் கிடையாது. இரண்டும் வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் வருகிறது. தலைக்கு தேய்க்கும் எண்ணெய் உற்பத்தி, விற்பனைக்கு உரிமம் அவசியம். 

பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர். 
 

இதையும் படிங்க: Erode: கந்துவட்டி கடன் குடும்பத்தையே கதைமுடித்த பயங்கரம்.. மோசடி செயல்களால் நடந்த பெருந்துயரம்.!