அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கோவை: 2வது ரேங்க் எடுத்ததால் விரக்தி; 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.!
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர், இரண்டாவது மதிப்பெண் வந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி, மகாராணி அவென்யூவில் வசித்து வருபவர் பியூலா. இவரின் மகன் சசீந்திரா (வயது 14). சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுவன் நன்றாக படித்து வந்த நிலையில், எப்போதும் முதல் மதிப்பெண் எடுத்து வந்துள்ளார். கடந்த அரையாண்டு தேரையும் அவர் நல்லபடியாக எழுதியதாக தெரியவருகிறது.
மதிப்பெண் குறைந்ததால் சோகம்
கடந்த வாரம் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட நிலையில், அரையாண்டு விடைத்தாள் வழங்கப்பட்டது. அதன்படி, எப்போதும் முதல் இடத்தை பிடிக்கும் மாணவர், தற்போது இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நண்பர்களிடமும் இரண்டாவது இடம் குறித்து புலம்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. குடியிருப்பு வளாகம் அருகே இளைஞர் வெட்டிப்படுகொலை.. அச்சத்தில் மக்கள்.!

வருந்தியபடி புலம்பல்
மேலும், வீட்டிற்கு சென்று தாயிடமும் வருத்தம் தெரிவித்த நிலையில், தாய் ஆறுதல் கூறியும் மனம் தேறவில்லை. நண்பர்கள், உடன் படிப்பவர்கள், தாய் என யாரிடமும் பேசாமல் விரக்தியிலேயே சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தவர், தாயிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். பின் தாயார் மகனுக்கு காபி போட, பால் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
தற்கொலை
பின் வீட்டிற்கு வந்தபோது மகன் இல்லாத நிலையில், அவரை வீட்டில் தேடி இருக்கிறார். அப்போது, சிறுவன் படுக்கை அறையில் சடலமாக தூக்கில் தொங்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பியூலா அலறவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விசயம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுவன் மதிப்பெண் குறைவாக எடுத்து இரண்டாம் இடத்தை பெற்றதால் மன அழுத்தத்தை எதிர்கொண்டு தற்கொலை செய்தது அம்பலமானது.
இதையும் படிங்க: பிரியாணியில் பூச்சி?.. இன்ஸ்டாகிராமில் வீடியோ ரிலீஸ் செய்த இளைஞர்.. சிசிடிவியில் ஷாக் உண்மை.!