17 வயதில் செய்யிற காரியமா இது? ஆன்லைனில் குழு அமைத்து அதிர்ச்சி.. விசாரணையில் பகீர் தகவல்.!



in Chennai Thiru VK Nagar Cannabis Sales Gang Arrested 

 

படிக்கும் வயதில் இளவயதினர் கையாளும் கூடா நட்பு, கஞ்சா விற்பனை செய்யவைத்து, இறுதியில் சிறைக்கு அனுப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள திருவிக நகர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி, காவல் உதவி ஆய்வாளர் சின்னத்துரை தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினத்தில் இரவு நேரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: #Breaking: 2 நாட்களில் விலகுகிறது வடகிழக்கு பருவமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

அச்சமயம், சதேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்த நிலையில், அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

chennai

17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது

இருவரிடம் நடந்த விசாரணையில், இவர்கள் பெரவள்ளூரில் உள்ள பாக்கியம் தெருவில் வசித்து வரும் நிகேஷ் (வயது 19) என்பது தெரியவந்தது. மற்றொரு நபர் 17 வயது சிறுவன் ஆவார். 

இவர்கள் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூரில் வசித்து வரும் குமாரியிடம், ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்து 2 கிலோ அளவிலான கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர். பின் ஆன்லைன் செயலியில் டெலகிராம் பக்கத்தில் குழுவை அமைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.. 

விசாரணைக்கு பின்னர் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நிகேஷை சிறையில் அடைத்தனர். மேலும், சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: கலிகாலத்தில் இப்படியும் நடக்குமா? 17 வயது சிறுவனை இழுத்து ஓடிய 28 வயது இளம்பெண்.. நடந்தது என்ன?