தாம்பரம்: பெண் காவலரின் தங்க சங்கிலி பறிப்பு; பின்தொடர்ந்து வந்து துணிகரம்.!



in Chennai Tambaram Chain Snatching 

 

சென்னையில் உள்ள தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா. இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவலராக வேலை பார்த்து வருகிறார். 

சம்பவத்தன்று சேலையூர் தேவராஜ் தெருவில் இந்திரா நடந்து வந்தார். அப்போது, அவரை 2 பேர் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்தனர். 

இதையும் படிங்க: Gold Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.! 

வாகன தணிக்கை தீவிரம்

இந்திரா தனது வீட்டிற்குள் செல்ல முற்பட்டபோது, அவரின் கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆங்காங்கே சோதனை நடத்தப்பட்டது.

இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இதனிடையே, கொள்ளையர்கள் இதேபோல 8 இடங்களில் குற்றச்செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: மிதிவண்டியில் சென்றபோது சோகம்.. சக்கரத்தில் சிக்கி 14 வயது சிறுவன் மரணம்.. பரிதவிப்பில் தாய்.!