BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அரியலூர்: மூளைச்சாவு அடைந்த விவசாயி.. 8 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பசுமை குமார். இவர் கடந்த பிப்.04 ம் தேதி, கால்நடைகளுக்கு தழைகள் வெட்டிக்கொண்டு இருந்தார்.
அப்போது, அவர் நிலைதடுமாறி விழுந்ததில், தலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். இதனிடையே, சிகிச்சையில் இருந்தவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையும் படிங்க: கல்விக்கடன் ரத்தை நம்பி ஏமாற்றம்.. மேலாளரின் கெடுபிடியால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை.!

பசுமைக்குமார் நெகிழ்ச்சி செயல்
இதனால் குடும்பத்தினருடன் விருப்பப்படி அவரின் உடலில் இருந்த இதயம், கண்கள், கல்லீரல் என 8 உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டன. இதன் வாயிலாக 8 பேருக்கு விவசாயி பசுமைக்குமார் மறுவாழ்வு அளித்து இருக்கிறார்.
அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. விவசாயியின் குடும்பத்தினரின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
அரியலூர் விவசாயியின் உடல் உறுப்பு தானம் காரணமாக தர்மபுரி, சென்னை, கோவை, நெல்லை, சேலம் உட்பட பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பலன் பெறுகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது.. சிங்கள கடற்படை மீண்டும் அட்டகாசம்.!