தனியார் நிதிநிறுவன ஊழியர் எரித்துக்கொலை? பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சடலம் மீட்பு.. பதறவைக்கும் சம்பவம்.!



in Ariyalur a Private Finance Company Employee Killed 

நிதிநிறுவன ஊழியர் பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் கொல்லப்பட்டார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வருபவர் சிவா (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியாக வேலை பார்த்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை பகுதிக்கு வேலைக்கு சென்றார். அதாவது, அங்கு பணம் வசூலிக்க வேண்டி சென்றுள்ளார் என தெரியவருகிறது. 

இதையும் படிங்க: வீரியம் தெரியாத விஜய்க்கு பதில் சொல்லனுமா? - அமைச்சர் சிவசங்கர் காட்டம்.!

பின் அவர் வீட்டிற்கு வராத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். 

Ariyalur

கருகிய நிலையில் சடலம்

இதனிடையே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதக்களம், செங்கால் ஓடை பகுதியில் உடல் கருகிய நிலையில் இருப்பதாக கால்நடை மேய்ப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். 

இதன்பேரில் சென்ற காவல்துறையினர், சடலமாக மீட்கப்பட்டது சிவா என்பதை உறுதி செய்தனர். அவர் எப்படி உயிரிழந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என பல கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக தவணை நிலுவை தொகையை அவர் வசூலிக்க சென்றது தெரியவந்ததால், அதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரியலூர்: மூளைச்சாவு அடைந்த விவசாயி.. 8 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்.!