வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
பெற்றோர்களே எச்சரிக்கை!.. சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 25 ஆயிரம் அபராதத்துடன் சிறை தண்டனை..!
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான ஏ.கே.ஆர் அகாடமி பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவ்ராஜ் ஆலோசனையின்படி, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் பேசுகையில், மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும். 18 வயது நிரம்பாத இளம் சிறார்கள் வாகனம் ஓட்ட, பெற்றோர் அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதித்து அவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பொற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன் சிறை தண்டனை பெற்றத்தர மோட்டார் வாகன சட்டத்தில் இடமுண்டு என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியின் செயல் அதிகாரி சுப்ரமணியன் மற்றும் பள்ளி தலைவர் கணேஷ் பேசுகையில், மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு, மிக எளிதாக பலரையும் சென்றடையும் என்று கூறினர். மேலும் தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாட்ஷ பேசுகையில், இதுபோன்ற விழிப்பணர்வு னிகழ்ச்சிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டு என்று கூறினார்.