தமிழகம்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும்!! சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு!!

Summary:

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியத

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக மிகத்தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர், டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் சரியாக நடத்தப்படவில்லை என்றும், அதனால் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பருவத்தேர்வில் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், அந்த மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மதிப்பெண் குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்களும் மீண்டும் தேர்வு எழுதவும் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


Advertisement