ஆற்றில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்... கள்ளக்காதலால் நிகழ்ந்த விபரீதம்... போலீசார் விசாரணை!!

ஆற்றில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்... கள்ளக்காதலால் நிகழ்ந்த விபரீதம்... போலீசார் விசாரணை!!


Illegal relationship man murder police investigation going on

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செம்மணங்கூரை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் - வசந்தகுமாரி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் குமாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு வசந்தகுமாரிக்கு ஆண் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

illegal relationship

இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் சந்தோஷ் குமாரை காணாததால் அவரது உறவினர்கள் தேடி பார்த்துள்ளனர்‌. ஆனால் சந்தோஷ் குமார் கிடைக்காததை அடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இதற்கிடையில் போலீசாருக்கு உளுந்தூர்பேட்டை கெடிலம் ஆற்றில் ஆண் நபர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் அது காணாமல் போன சந்தோஷ் குமார் என்பது தெரியவந்துள்ளது. 

உடனே போலீசார் வசந்தகுமாரி மற்றும் அவரின் கள்ளக்காதலன் இருவரையும் கேது செய்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.