ஓய்வுபெற்ற தமிழகத்தின் சிலை மீட்பு நாயகன், அவரது இடத்தை நிரப்ப வந்த புதிய அதிகாரி இவர்தான்.!

ஓய்வுபெற்ற தமிழகத்தின் சிலை மீட்பு நாயகன், அவரது இடத்தை நிரப்ப வந்த புதிய அதிகாரி இவர்தான்.!


IG ponmanikavel retired

சிலை கடத்தல் பிரிவு ஐ ஜி    பொன்.மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் புதிய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றியவர் பொன் மாணிக்கவேல். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிந்து பணி ஓய்வு பெறுகிறார்.

                                 IG ponmanikavel

மேலும் சிலை கடத்தல் தொடர்பான பல வழக்குகளை சிறப்பாக விசாரணை செய்து வருவதால் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர். 

இந்நிலையில் பொன். மாணிக்கவேலின் பணி ஓய்வை தொடர்ந்து புதிய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக, தமிழ்நாடு நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றிய அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.