தமிழகம்

மனைவி கேட்ட ஒரு விஷயம்.! குழப்பத்தில் தவித்த கணவன்.! திருமணமான மூன்றே மாதத்தில் நடந்த சோகம்.!

Summary:

தென்காசி மாவட்டத்தில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான ராஜ்குமார். இவர் 18 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்குப் பிறகு தன் பெற்றோர், தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பது ராஜ்குமாரின் மனைவிக்குப் பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் தனிக்குடித்தனம் செல்லலாம் என்று தொடர்ந்து ராஜ்குமாரை வற்புறுத்தி வந்துள்ளார். 

ராஜ்குமாரும் சிறிது நாட்கள் கழித்து தனிக்குடித்தனம் செல்லலாம் என்று மனைவியை சமாதானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது .ஆனால் தனி குடித்தனம் போவது ராஜ்குமாரின் குடும்பத்திற்கும் அவரை வளர்த்த பாட்டிக்கும் பிடிக்கவில்லை என்று தெரிகின்றது. ராஜ்குமாரின் பாட்டி குடும்பத்தை பிரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் குழப்பத்தில் இருந்த ராஜ்குமார் கடந்த பத்து நாட்களாக யாரிடமும் பேசாமல், நண்பர்களையும் சந்திக்காமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராஜ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement