"அவன் நான் கள்ளக்காதலன் போய் கடி..." மனைவியின் கள்ள உறவால் 32 வயது இளைஞரின் விபரீத செயல்.!!



husband-sets-dog-on-wife-lover-in-shocking-revenge-atta

சென்னையை அடுத்த துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்த 32 வயது வாலிபரின் மனைவியுடன் அதே பகுதியை சார்ந்த 30 வயது நாகராஜன் என்பவர் கள்ளத்தொடர்பில் இருந்ததுள்ளார். பலமுறை இந்த உறவை நிறுத்திக் கொள்ளுமாறு வாலிபர், நாகராஜனிடம் கூறிவந்துள்ளார். இதை பெரிதுபடுத்தாத நாகராஜன் அடிக்கடி வாலிபரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் நாகராஜனுக்கும் அந்த கள்ள காதலியின் கணவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனை அங்கிருந்த மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இதே காரணத்திற்காக இருவருக்கிடையே பெரும் தகராறு ஏற்பட்டது. பலமுறை கூறியும் கேட்காத நாகராஜனின் குணத்தால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தன் வீட்டில் வளர்த்து வரும் நாயை நாகராஜன் மீது ஏவி கடிக்க வைத்துள்ளார்.

tamilnadu

இதில் காயமடைந்த நாகராஜனை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, இந்த சம்பவம் பற்றியறிந்த கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்துள்ளனர். நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் பயங்கரம்... பெண் போலீஸ் வெட்டி கொலை.!! கணவன் தலைமறைவு.!!

இதையும் படிங்க: "வயதில் மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்..." நிதி நிறுவன ஊழியரின் விபரீத செயல்.!! போலீஸ் நடவடிக்கை.!!