மனைவி சொன்ன அந்த ஒத்த வார்த்தை..! முந்திக்கொண்டு மனைவியை கொலை செய்த கணவன்..!

மனைவி சொன்ன அந்த ஒத்த வார்த்தை..! முந்திக்கொண்டு மனைவியை கொலை செய்த கணவன்..!


Husband killed wife who addict for alcohol

குடிப்பழக்கத்திற்கு அடிமையான மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி முருகவள்ளி. இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் சண்முகராஜ் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் முருகவள்ளிக்கு அக்கம் பக்கத்துக்கு பெண்களுடன் பழக்கம் ஏற்பட, ஓட்க்கா குடித்தால் அழகாக மாறிவிடலாம் என அந்த பெண்கள் முருகவள்ளியிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அவரும் தினமும் ஓட்க்கா குடிக்க தொடங்கியுள்ளார். இறுதியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக மாறிவிட்ட முருகவள்ளி குடும்ப செலவிற்காக கணவன் கொடுக்கும் பணத்தையும் குடிப்பதற்காக செலவு செய்துவந்துள்ளார்.

Murder

அதுமட்டும் இல்லாமல், அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கி முருகவள்ளி குடித்துவந்துள்ளார். இந்த தகவல் சண்முகராஜுக்கு தெரியவர, அவர் தனது  மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவள்ளி, தான் குடிப்பதற்கு தினமும் பணம் தராவிட்டால் தூங்கும்போது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிடுவதாக கணவனை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சண்முகராஜ், தனது மனைவிக்கு ஓட்க்கா வாங்கி கொடுத்து, அவர் போதையில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் தனது இரண்டு குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த சண்முகராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முருகவள்ளியின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் ஆதரவற்ற நிலையில் அவரது உடல் உள்ளது. மேலும் தந்தை சிறைக்கு சென்றுவிட்டநிலையில், தாய் இறந்துவிட்டநிலையில் அவர்களது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்று நிற்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.