குடிகார கணவனை தட்டிக்கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து.. கணவன் வெறிச்செயல்.!

குடிகார கணவனை தட்டிக்கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து.. கணவன் வெறிச்செயல்.!


husband-killed-his-wife-in-chennai

வேலைக்குபோக வற்புறுத்திய மனைவியை, குடிபோதையில் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 42). இவரது மனைவி தனலட்சுமி (வயது 38). தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வரும் தியாகராஜன் அவ்வப்போது பெயிண்டர் வேலையும் செய்து வந்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய தியாகராஜன் வேலைக்கு செல்லாததால், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று இரவு தியாகராஜன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபோது, தனலஷ்மி அவரை வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது.chennaiஇதனால் ஆவேசமடைந்த தியாகராஜன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை கொலை செய்த நிலையில், தனலட்சுமியின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு, கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குடிபோதையில் இருந்த தியாகராஜனை கைது செய்து, தனலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து மனைவியை கொலை செய்ததற்காக தியாகராஜனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.