தமிழகம்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்! அதிர்ச்சி காரணம்!

Summary:

husband killed his wife


சென்னைல் ஆட்டோ ஓட்டுநராக இருந்துவருபவர் மகாராஜன். இவர் லட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் உள்ளான். திருமணம் ஆனதிலிருந்தே இந்த தம்பதியினருக்கு அடிக்கடி  குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதன்காரணமாகவே அவர்களது குடும்பம் வேறுபகுதிக்கு இடம்பெயர்ந்தனர். ஆனாலும், மீண்டும் தம்பதியிருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட லட்சுமி அவரது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கணவர் மீது காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் புத்திமதி கூறி ஒன்றாக சேர்ந்து வாழுமாறு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகராஜன் திடீரென அங்கிருந்த கத்தியை கொண்டு லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். 

லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த கருத்தம்மாவை பார்த்து காவல்துறைக்கு  தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மகாராஜனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


Advertisement