16 வயது சிறுமி மீதான காதல் மோகம்.! கட்டிய மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

16 வயது சிறுமி மீதான காதல் மோகம்.! கட்டிய மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!


husband killed his wife

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தை சேர்ந்தவர் பிச்சை, மீனவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகலா என்று பெண்ணிற்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி மேகலா வீட்டில் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது மனைவி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக  பிச்சை உறவினர்களிடம் கூறினார். இதை நம்பிய உறவினர்கள் ஊர் வழக்கமுறைப்படி கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மேகலாவின் சகோதரர் அந்தோணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில் மேகலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் மேகலாவின் கணவர் பிச்சையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேகலா கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

Murder

கொலை செய்யப்பட்ட மேகலாவின் தங்கை உறவுமுறை கொண்ட 16 வயது பெண் அடிக்கடி மேகலா வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது  பிச்சைக்கு சிறுமி மீது மோகம் ஏற்பட்டது. அவளை அடைய வேண்டும் என பல முறையில் முயற்சி செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மேகலா கணவரை கண்டித்துள்ளார். தனது காதலுக்கு மேகலா தடையாக இருப்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 17- ஆம் தேதி இரவு பிச்சை அவரது மனைவி மேகலாவை அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து மனைவி நோய்வாய்பட்டு இறந்ததாக உறவினர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார். இதனையடுத்து மேகலாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதனையடுத்து போலீசார் பிச்சையை கைது செய்தனர்.