
husband died for drunk
சென்னை, அயனாவரத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் மனோகரன். இவர் சரிதா என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோகர் அடிக்கடி மது குடித்துவிட்டு, மனைவியை அடிப்பதும், துன்புறுத்துவதாகவும் இருந்துள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த சரிதா அவ்வப்போது, அருகில் இருக்கும் தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு அதிகமாக மது அருந்தியிருந்த மனோகர், தயார் வீட்டிற்கு சென்றிருந்த சரிதாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு அதிக அளவில் சத்தம் கேட்டதால், அருகில் இருந்த ராகவேந்திரன் என்ற முதியவர் இடையில் வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மனோகர் தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுக்க முயற்சித்தபோது கத்தி அவரது அடிவயிற்றிற்கு கீழே வெட்டி, மர்ம உறுப்பிலும் காயமடைந்து அவருக்கு அதிக ரத்தம் வெளியேறியுள்ளது.
அந்த நிலையிலும் கத்தியை வெளியே எடுத்து ராகவேந்திரனை அவர் குத்தியுள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதன் காரணமாக மனோகர் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement