நீண்ட நாட்களாக வெளிநாட்டிலிருந்த கணவரின் போன்காலுக்காக காத்திருந்த மனைவி! திடீரென வந்த அதிர்ச்சி செய்தி!

நீண்ட நாட்களாக வெளிநாட்டிலிருந்த கணவரின் போன்காலுக்காக காத்திருந்த மனைவி! திடீரென வந்த அதிர்ச்சி செய்தி!



husband-dead-by-corono-im-saudi-arabia

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆண்டிகுளப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணிக்குமார். 44 வயது நிறைந்த இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கணிக்குமார் கடந்த 13 வருடங்களாக சவூதி அரேபியாவில் கிரேன் ஆப்ரேட்டராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் சவுதி அரேபியாவிலிருந்து அடிக்கடி  தனது குடும்பத்தினருடன் பேசி வந்துள்ளார். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் சவுதி அரேபியாவிலிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போன்கால் ஒன்று வந்துள்ளது. அப்பொழுது அவர்கள் கணிக்குமாருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. அதனால் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளனர்.

corono

இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கணிக்குமார் குடும்பத்தினருக்கு மீண்டும் சவுதி அரேபியாவிலிருந்து போன்கால் வந்துள்ளது. அப்பொழுது அவர்கள் உங்களது கணவர் கணிக்குமார் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். இதனை கேட்டதும் குடும்பத்தினர்கள் அனைவரும் கதறி துடித்தனர். மேலும் தற்போது விமான சேவைகள் எதுவுமில்லை. மேலும் கொரோனாவால் உயிரிழந்ததால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இயலாது. சவுதி அரேபியாவிலேயே  அடக்கம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடைசியாக ஒருமுறை கூட கணிக்குமாரின் முகத்தை பார்க்க முடியவில்லையே என உறவினர்கள் அனைவரும் கதறி பிடித்துள்ளனர். மேலும் அவர் கொரோனாவால்தான் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.