சொந்த வீட்டிலேயே 100 சவரன் நகைகளை திருடிவிட்டு நாடகமாடிய மனைவி! கணவர் எடுத்த விபரீத முடிவு!

சொந்த வீட்டிலேயே 100 சவரன் நகைகளை திருடிவிட்டு நாடகமாடிய மனைவி! கணவர் எடுத்த விபரீத முடிவு!


husband-commits-suicide-wife-cheating-him

தூத்துக்குடி தாளமுத்து பகுதியை சேர்ந்தவர் வின்செண்ட். இவர் துறைமுக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி ஜான்சி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி வின்சென்ட் தனது வீட்டு பீரோவில் இருந்த 100 பவுன் நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வின்சென்ட்டின் மனைவி ஜான்சிதான் அவர் வாங்கிய கடனை அடைப்பதற்காக, கணவருக்கு கசாயம் என மயக்க மருந்தை கொடுத்து தூங்க வைத்து விட்டு நகைகளை கொள்ளையடித்து மண்ணில் புதைத்து வைத்தது தெரியவந்தது.

 

suicide

 அதனைத் தொடர்ந்து வின்சென்டின் மனைவி ஜான்சியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மனமுடைந்து காணப்பட்ட வின்சென்ட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.