தமிழகம்

திருமணமாகி ஓராண்டிலேயே நேர்ந்த துயரம்! நள்ளிரவில் கணவனின் அறைக்குச் சென்ற இளம்பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

Husband commits suicide for family issue

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணமான நிலையில், அவர் தனது மனைவி மற்றும் தனது குடும்பத்தார்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிகில் அடிக்கடி தனது மனைவியுடன் சிறிதாக சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் சமீபத்திலும் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சண்டை போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கோபமாக அவரது அறைக்கு சென்ற நிகில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இந்நிலையில் பயந்துபோன அவரது மனைவி தொடர்ந்து அறைக்கதவை தட்டிக்கொண்டே இருந்துள்ளார்.

பின்னர் பதறிப்போய் அவரது குடும்பத்தினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிகில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் குடும்பத்தினரிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement