தமிழகம்

இறந்துபோன மனைவியின் சடலத்திற்கு 2 நாட்களாக பால் ஊட்டி பராமரித்த கணவன்.! நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!

Summary:

Husband care wife without knowing she is dead before 2 days

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (90) இவரது மனைவியின் ஆண்டாள். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருந்த நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர்.

மொத்தம் 6 பிள்ளைகளில் 2 பேர் உயிர் இழந்துவிட்டநிலையியல் மீதமுள்ள பிள்ளைகள் கோயம்புத்தூர் மாவட்டத்திலும், ஒருவர் தேனி மாவட்டத்திலும் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வயதான பெற்றோர் தங்கள் சொந்த கிராமத்திலையே இருந்த நிலையில் அவரது பிள்ளைகள் வாரத்திற்கு ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.

தற்போது ஊரடங்கு என்பதால் அவர்களது பிள்ளைகளால் பெற்றோரை காண வர இயலவில்லை. இதனால் அருகில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்கு போன் செய்து தங்கள் பெற்றோரை பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்களும் தொடக்கத்தில் இவர்களை பார்த்துக்கொள்ள, திருமங்கலத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் உறவினர்களாலும் வயதான தம்பதியரின் வீட்டிற்கு செல்ல இயலவில்லை.

இதனிடையே சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் தாம் தவித்து வருவதாக பாண்டி தனது மகள் நாகலட்சுமி என்பவருக்கு போன் செய்து கூறியுள்ளார். விபரீதத்தை உணர்ந்த நாகலட்சுமி அரசின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தன்னுடைய தந்தை மற்றும் தாயின் நிலையை எடுத்து கூறி அங்கே செல்ல அனுமதி கேட்டுள்ளார்.

இதனிடையே திருமங்கலம் வட்டாட்சியர் சிலரை பாண்டியின் வீட்டிற்கு அனுப்பி அவர்களுக்கு உணவு கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து அங்கே சென்ற பணியாட்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பாண்டியின் மனைவி ஆண்டாள் நிர்வாணமாக படுத்திருந்த நிலையில் அவரது உடலிலிருந்து துர்நாற்றம் வருவதை அவர்கள் உணர்ந்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் ஆண்டாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் பாண்டியிடம் விசாரித்ததில் ஆண்டாள் சில நாட்களுக்கு முன்னர் கீழே விழுந்துவிட்டதாகவும், தான்தான் அவருக்கு சாப்பாடு கொடுத்து பால் ஊட்டி பார்த்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஆண்டாள் இறந்து ஏறக்குறைய 2 நாட்கள் இருக்கும் என போலீசார் கூறியுள்ளநிலையில், தனது மனைவி இறந்ததுகூட தெரியாமல் பாண்டி அவருக்கு பால் ஊட்டி பார்த்துக்கொண்ட சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement