தலை, கழுத்தில் அரிவாள் வெட்டு.... நள்ளிரவில் மனைவிக்கு நடந்த கொடுமை... கணவர் காவல் நிலையத்தில் சரண்.!



husband-attacked-his-wife-brutally-during-a-fight-polic

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்பத்தகாரரின் காரணமாக இளம் பெண் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக  அவரது கணவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கட்டையன்விளை பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் (42). இவரது மனைவி ஏஞ்சலின் டயா (34).  கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.

tamilnadu

இந்நிலையில் நேற்று நள்ளிரவும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆத்திரமடைந்த கணவர் செல்வராஜ் தனது மனைவியை தலை கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டி இருக்கிறார். இந்த தாக்குதலில் அலறி துடித்த அவரது மனைவியின் குரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனைவியை தாக்கிய செல்வராஜ் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் கணவனால் மனைவி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.