தமிழகம்

குழந்தை பிறந்து தாய்வீட்டில் இருந்த மனைவி! அழைக்க சென்ற கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சோக சம்பவம்!

Summary:

Husband and wife coomit suicide for family problem

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே  காரியனூர் என்ற  பகுதியை சேர்ந்தவர் சத்யாதேவி. இவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம்,  நல்லாம்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது 5மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக, பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற சத்யாதேவி, குழந்தை பிறந்து 5 மாதமாகியும் அங்கேயே இருந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தையை தங்களது ஊருக்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு கணேசன் மற்றும் சத்யாதேவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சத்யாதேவி தனது வீட்டின் அறைக்குள் சென்று, மின்விசிறியில் சேலையை மாட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் கதவை உடைத்து சத்யாதேவியை மீட்ட குடும்பத்தினர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் மனைவி உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மாத குழந்தையை தவிக்க விட்டுவிட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement