தமிழகம்

கட்டிய மனைவியின் தலைமுடியை அரிவாளால் அறுத்து கணவன் செய்த மோசமான செயல்.! பொறுமையிழந்த மனைவியின் துணிச்சலான காரியம்.!

Summary:

கட்டிய மனைவியின் தலைமுடியை அரிவாளால் அறுத்து கணவன் செய்த மோசமான செயல்.! பொறுமையிழந்த மனைவியின் துணிச்சலான காரியம்.!

மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து கொடூரமாக சித்திரவதை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் என்பவருக்கும், சாவித்ரி என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. பாரத் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே தனது மனைவியை வரதட்சணை கேட்டு பாரத் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்தால் வருத்தப்படுவார்கள் என்று எண்ணி சாவித்ரி பிறந்த வீட்டில் எதுவும் கூறாமல் மறைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாரத் தனது மனைவியின் தலைமுடியை அரிவாளால் அறுத்து, சரமாரியாக அடித்து கொடுமை செய்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சாவித்ரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சாவித்திரி தனது கணவர், மாமனார், மாமியார் மீது புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கணவர் பாரத்தை கைது செய்தனர். மேலும், தலைமைறைவாக இருக்கும் அவரது தாய் மற்றும் தந்தை இருவரையும் தேடி வருகின்றனர்.


Advertisement