மாதவிடாய் என கெஞ்சியும் பலனில்லை.. காவல்நிலைய பெண் ஊழியர் வன்கொடுமை.. ஓசூரில் நெஞ்சை உலுக்கும் கொடுமை.!
மாதவிடாய் காரணமாக வலியால் துடித்தபோது உதவி செய்வதாக நடித்த காமுகன் பெண்ணை வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்துள்ளது.
காவல்துறையில் வேலை:
Krishnagiri News Today: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், பாகலூர், சத்தியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த காவல்துறை அதிகாரி, கடந்த 2017ல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து, அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் காவல்துறையில் கணினி பிரிவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!
பேருந்தில் சென்று வருவார்:
தொடக்கத்தில் அவர் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தினமும் அவர் பணிக்குச் சென்று வரும்நிலையில், ஓசூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சொந்த கிராமத்துக்கு பேருந்தில் சென்று வருகிறார்.
லிப்ட் தருவதாக அழைத்தார்:
இதனிடையே, கடந்த 16ம் தேதி மாலை நேரத்தில் வழக்கம்போல பணி முடிந்து தனியார் பேருந்தில் கிராமத்துச் சென்றுகொண்டு இருந்தார். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது வீட்டுக்கு 2 கிமீ தொலைவு உள்ள நிலையில், நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அதே கிராமத்தில் வசித்து வரும் ஓட்டுநர் மூர்த்தி (வயது 37), தனது டெம்போ வாகனத்தில் பெண்ணை இறக்கி விடுவதாக கூறி இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை:
பெண்ணும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்தான் என நம்பி சென்ற நிலையில், ஆட்கள் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். பெண் சுதாரிப்பதற்குள் கயவன் பெண்ணை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்து இருக்கிறார். பெண் கத்தி-கூச்சலிட்டும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உதவி கிடைக்கவில்லை. பின் அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்ற பெண், தாய் மற்றும் உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார்.
அதிகாரிகள் விசாரணை:
பின் மறுநாள் காலையில் பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி மூர்த்தியின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த நபரை தேடி வந்தனர். இதனிடையே, மூர்த்தி பாகலூர் காவல்நிலைய வாசலில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்ததும் அவரிடம் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெஞ்சியும் கேட்கவில்லை:
பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறுகையில், "சம்பவத்தன்று மாதவிடாய் காரணமாக உடலளவிலும், மனதளவிலும் நான் பலவீனத்துடன் இருந்தேன். நடக்க இயலாததால் யாரேனும் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டால் போதும் என இருந்தது. அப்போது மூர்த்தி வந்து வீட்டில் விடுவதாக கூறியதால் நம்பி சென்றேன். என்னிடம் தவறாக நடக்க முயன்றபோது மறுப்பு தெரிவித்ததால் என்னை வயிற்றில் காலால் உதைத்து கீழே தள்ளினார். நிலைகுலைந்து கீழே விழுந்து வலியால் துடித்தேன். மாதவிடாய் வலி என கெஞ்சியும் கேட்காமல் வாகனத்தின் இருக்கைக்கு நடுவே தள்ளி வன்கொடுமை செய்தான். ரத்தப்போக்கு அதிகமானதால் என்னால் தப்பிக்கவும் முடியவில்லை. நான் இறந்திருந்தால் எனது குழந்தைகள் அனாதை ஆகி இருப்பார்கள். எனது அம்மாவுக்கு கண்களும் தெரியாது. அப்பா, கணவர், உடன் பிறந்தவர்கள் என எனக்கு யாரும் இல்லை. தற்போது பார்க்கும் வேலையில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் தான் குழந்தைகள், அம்மாவை கவனிக்கிறேன். இந்த நிகழ்வால் மனம், உடலளளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன்" என கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் கொடூரம்.. ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தலைநகரில் அதிர்ச்சி.!